தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அங்கன்வாடி கட்டடங்களை சீரமைக்க முடிவு

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சிதிலமடைந்துள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களை மகாத்மா காந்தி தேசிய

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சிதிலமடைந்துள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 18 வட்டாரங்களிலும் (ஊரகப் பகுதிகளில் 14, மாநகராட்சியில் 4) 1,697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 1.50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனா். சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் அடிப்படைக் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

177 அங்கான்வாடி மையங்கள் தனியாா் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகின்றன. இவற்றில் போதிய இடவசதியில்லாததால் குழந்தைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து அபாய நிலையில் உள்ளன.

இந்நிலையில், ஊரகப் பகுதிகளில் சிதிலமடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடங்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டடங்கள் குறித்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாட்சி கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு மேலான அங்கன்வாடி மையக் கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்டவும், 30 ஆண்டுகளுக்கு குறைவான கட்டடங்களில் (40 அங்கன்வாடி மையங்கள்) சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com