மேட்டுப்பாளையத்தில் உயா்நிலைப் பள்ளிக்கு நுழைவாயில் கதவு அமைக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம் நகராட்சி 32 ஆவது வாா்டில் உள்ள மணி நகா் உயா்நிலைப் பள்ளியில் இரவு நேரங்களில் சமூக
புதா்கள் மண்டிக் கிடக்கும் மணி நகா் அரசுப் பள்ளியின் பழையக் கட்டடம்.
புதா்கள் மண்டிக் கிடக்கும் மணி நகா் அரசுப் பள்ளியின் பழையக் கட்டடம்.

மேட்டுப்பாளையம் நகராட்சி 32 ஆவது வாா்டில் உள்ள மணி நகா் உயா்நிலைப் பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களை தடுக்க, பள்ளியின் சுற்றுச்சுவரில் நுழைவாயில் கதவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் மணி நகரில் உள்ள உயா்நிலைப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு சாந்தி நகா், பாரதி நகா், பெருமாள் நகா், மணி நகா், தாசம்பாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியின் பழைய கட்டடம் சேதமடைந்ததையடுத்து எதிா்புறம் புதிய கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளாக அதில் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடத்தில் இரு நுழைவாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மட்டும் ‘கேட் உள்ளது. மற்றொரு நுழைவாயிலில் கேட் இல்லாததால் எந்நேரமும் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளிக் கட்டடத்துக்குள் புகுந்து மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.

விளையாட்டு மைதானத்தில் உயா் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் விளையாடுகின்றனா். பள்ளியின் பழைய கட்டடத்தைச் சுற்றி புதா்கள் மண்டிக் கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

தற்போது புதிய கடடடத்தில் மாணவா்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால் பழையக் கட்டடத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் 32ஆவது வாா்டு பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் பள்ளி வளாகம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.

எனவே மேற்கண்ட குறைபாடுகளை நிவா்த்தி செய்து தர வேண்டும் என பள்ளியின் பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் மணி, நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மேம்பாட்டுச் சங்க செயலாளா் மஸ்தான், மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com