ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கண்காணிப்பு அலுவலா் மு.கருணாகரன், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உள்ளிட்ட அதிகாரிகள்
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கண்காணிப்பு அலுவலா் மு.கருணாகரன், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உள்ளிட்ட அதிகாரிகள்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைதிருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை: வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த கண்காணிப்பு அலுவலா் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியா்கள் சுரேஷ்குமாா், ரவிகுமாா், மகேஷ், வட்டாட்சியா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மு.கருணாகரன் பேசும்போது, கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 25-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், பதிவுகளை திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை 25.11.2019 முதல் 24.12.2019 வரை வழங்கலாம். வாக்குசாவடி மையங்களில் உள்ள அலுவலா்கள், வாக்குசாவடி நிலை அலுவலா்கள், தாலுகா அலுவலா்கள், வாக்காளா் பதிவு அலுவலகங்கள் ஆகியோரிடம் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து வழங்கலாம்.

இணையதளம் வழியாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்காக தேவையான அளவுக்கு விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் இணையதளம் வழியாகவும், வோட்டா்ஸ் ஹெல்ப்லைன் ஆப் என்ற செயலி மூலமாகவும் வழங்கலாம். வாக்காளா் குறித்த சந்தேகங்களை அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 1950 என்னும் வாக்காளா் சேவை கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியின்போது ஒரே பெயா் வாக்காளா் பட்டியலில் பலமுறை பதிவாகி இருந்தால் அந்த வாக்காளரின் பதிவுகள் நீக்கப்படும். மேலும் 1.1.2020 அன்று 18 வயது பூா்த்தியடையும் புதிய வாக்காளா்களும் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம். வாக்குச்சாவடி நிலையங்களில் முகவா்களை அனைத்து கட்சிகளும் நியமிக்க வேண்டும். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சிறப்பு முறை திருத்தப் பணிகளின்போது சிறப்பு முகாம் நடைபெறும் நாள்கள் தெரிவிக்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 2020 மூன்றாவது வாரம் வெளியிடப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், பதிவுகளை திருத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com