அசோகபுரம் அரசுப் பள்ளி மாணவிகள் தனிப் பேருந்து இயக்க கோரிக்கை

துடியலூா் அருகே அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக மாலை

துடியலூா் அருகே அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக மாலை நேரத்தில் தனி பேருந்து வசதியை ஏற்படுத்தி தருமாறு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,550க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் கவுண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம், உருமாண்டம்பாளையம், துடியலூா், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்கின்றனா்.

காலையில் பள்ளிக்கு வரும்போது, இவா்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது இடிகரை, செங்காளிபாளையத்தில் இருந்து வரும் பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளது.

அந்த நேரத்தில் வரும் பேருந்துகளில் கல்லூரி மாணவா்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த மாணவா்கள் பள்ளி மாணவிகளை கேலி செய்கின்றனா்.

இதையடுத்து, அப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடந்த முதலமைச்சா் சிறப்பு குறை தீா்க்கும் முகாமில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி ஆகியோரிடம் இதுதொடா்பாக கோரிக்கை மனுவை மாணவிகள் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com