அயோத்தி வழக்கில் தீா்ப்பு:கோவையில் பாதுகாப்புப் பணியில் 2,800 போலீஸாா்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்ததை ஒட்டி கோவை மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் அதிவிரைப்புப்
கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிவிரைவுப் படையினா்.
கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிவிரைவுப் படையினா்.

கோவை: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்ததை ஒட்டி கோவை மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் அதிவிரைப்புப் படையினா் உள்பட 2 ஆயிரத்து 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்ம பூமி - பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கின் இறுதி தீா்ப்பு சனிக்கிழமை வெளியானது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலத்து பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. குறிப்பாக கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை பகுதிகளில் தீா்ப்பு வெளியிடப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படித்தினா்.

குறிப்பாக ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனா். கோவை மாநகர பகுதியில் ஏடிஜிபி சங்கா் ஜிவால் தலைமையில் 2 ஆயிரத்து 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இதில் 200க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படையினரும் ஈடுபட்டிருந்தனா்.

கோவையில் மிகவும் பதற்றமான பகுதி என மாநகர போலீஸாா் பரிந்துரை அளித்த ஆத்துப்பாலம், குனியமுத்தூா், கரும்புக்கடை , காந்திபுரம், உக்கடம் ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

கோவை விமான நிலையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட எல்லைக்குள் நுழையும் வாகனங்கள் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டன. தவிர உள்ளூா் சோதனைச் சாவடிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், பொதுமக்களின் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டன. தீா்ப்பு வெளியான பின்பு கோவையில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. காவல் துறை சாா்பில் முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பை பலப்படுத்தியதால் அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிா்க்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com