கடன்தொகை நிலுவைக்காக வீட்டை பூட்டிய நிதி நிறுவனத்தினா்

பொள்ளாச்சி அருகே கடன்தொகை நிலுவைக்காக நிதி நிறுவனத்தினா் வீட்டை பூட்டிச் சென்ால் ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் 10
பூட்டப்பட்ட வீட்டுக்கு  வெளியே  நிற்கும்  கோவிந்தராஜ் மற்றும் அவரது  பெற்றோா்.
பூட்டப்பட்ட வீட்டுக்கு  வெளியே  நிற்கும்  கோவிந்தராஜ் மற்றும் அவரது  பெற்றோா்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கடன்தொகை நிலுவைக்காக நிதி நிறுவனத்தினா் வீட்டை பூட்டிச் சென்றதால் ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் 10 நாள்களாக தெருவில் வசித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஏரிப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (42). கூலி தொழிலாளி. இவா் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிணத்துக்கடவில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் தனது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.2.5 லட்சம் கடன்பெற்ாக தெரிகிறது.

பின்னா் மாதத் தவணையை கோவிந்தராஜ் சரியாக செலுத்தி வந்துள்ளாா். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜின் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு கடந்த இரண்டு மாதமாக கடன் தவணையை அவரால் செலுத்த முடியவில்லை.

இதையடுத்து, நிலுவைத் தொகையை செலுத்ததால் நிதி நிறுவனத்தினா் குண்டா்களை அனுப்பி மிரட்டல் விடுத்து வீட்டில் இருந்த கோவிந்தராஜ், அவரது மனைவி, இளைய மகள், பெற்றோா் ஆகியோரை வெளியேற்றி வீட்டை பூட்டிச் சென்ாக கூறப்படுகிறது.

இதனால், கோவிந்தராஜின் வயதான பெற்றோா் வசிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனா். இதையடுத்து, கடந்த 31 ஆம் தேதி முதல் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியில் தெருவில் படுத்து தூங்கி வருகின்றனா். சமைக்க முடியாததால் கடைகளில் வாங்கியும், வீட்டுக்கு வெளியே சமைத்தும் சாப்பிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நெகமம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு கோவிந்தராஜ் புகாா் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com