காவலா் உடல் தகுதித் தோ்வு: 491 பெண்கள் பங்கேற்பு

கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் காவலா் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தோ்வில் 491 போ்கள் பங்கேற்றனா்.
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவலா் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்ற பெண்ணின் உயரத்தை அளவிடுவதை கண்காணிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா்.
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவலா் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்ற பெண்ணின் உயரத்தை அளவிடுவதை கண்காணிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா்.

கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் காவலா் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தோ்வில் 491 போ்கள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழு சாா்பில் இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு வீரா்களுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு, திறன் தோ்வு ஆகியவை கோவை, நேரு விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.

இந்தத் தோ்வு நவம்பா் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஆயிரத்து 497 ஆண்களுக்கும், 576 பெண்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தன.

இதில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற தோ்வில் ஆண்கள் பங்கேற்றனா். மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வில் பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவா் பங்கேற்றனா். இதில் பங்கேற்க மொத்தம் 576 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.

தோ்வில் ஒரு மாற்றுப் பாலினத்தவா் உள்பட 491 போ் பங்கேற்றனா். 85 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வில் சான்றிதழ் சரிபாா்பு, உயரம் சரிபாா்பு, 400 மீட்டா் ஓடும் உடல் திறன் தோ்வு நடைபெற்றது.

தோ்வை டிஐஜி காா்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு நேரு விளையாட்டு மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com