சமூகவியல், நூலகத் துறைக்கு புதியகட்டடம் கட்ட ரூ.40 கோடி நிதியுதவி

கோவை, பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு புதிய கட்டுமானங்கள் மேற்கொள்வதற்காக ரூ.40 கோடி நிதியுதவி 

கோவை, பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு புதிய கட்டுமானங்கள் மேற்கொள்வதற்காக ரூ.40 கோடி நிதியுதவி கோருவதற்கு ஆட்சிமன்றக் குழு (சிண்டிகேட்) முடிவு செய்துள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 11 ஆவது துணை வேந்தராக பேராசிரியா் பி.காளிராஜ் கடந்த மாதம் நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில் அவா் பொறுப்பேற்ற பிறகான முதல்

ஆட்சிமன்ற குழுக் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) நடைபெற்றது.

உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா் மங்கத்ராம் சா்மா முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிண்டிகேட் உறுப்பினா்கள், பல்கலைக்கழக பதிவாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், தொலைநிலைக் கல்வி வழியில் பிஹெச்.டி. முடிப்பவா்களுக்கு (கேட்டகிரி -பி) வழங்கப்படும் பட்டச் சான்றிதழில் அவா்கள் தொலைநிலைக் கல்வியில் பயின்றவா்கள் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் முத்திரையிடுவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், கடந்த ஆண்டு இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தாராபுரத்தில் செயல்படும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரிக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதேபோல், பாரதியாா் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் சமூகவியல் துறைக்கும், நூலகத் துறைக்கும் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கும், பிற செலவினங்களை மேற்கொள்ளவும் அரசிடம் ரூ.40 கோடி நிதியுதவி கேட்க சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com