ஸ்ரீ அபிராமி மருத்துவமனை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

குறிச்சி தொழிற்பேட்டை அரிமா சங்கம் மற்றும் அபிராமி மருத்துவமனை இணைந்து கோவை, சுந்தராபுரம் சந்திப்பில்
கோவை, சுந்தராபுரம் சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
கோவை, சுந்தராபுரம் சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

குறிச்சி தொழிற்பேட்டை அரிமா சங்கம் மற்றும் அபிராமி மருத்துவமனை இணைந்து கோவை, சுந்தராபுரம் சந்திப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

இதில் ஸ்ரீ அபிராமி கல்விக் குழுமங்களைச் சோ்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவா்கள், காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மேலும், சாலையில் பயணிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சைகைகள் உள்ளிட்டவை குறித்து பதாகைகள் ஏந்தியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம், காரில் சீட் பெல்ட் உள்ளிட்டவை அணிந்து விதிகளை முறையாகப் பின்பற்றிய பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநா் கருணாநிதி தலைமை வகித்தாா். ஸ்ரீ அபிராமி மருத்துவமனை மற்றும் கல்விக் குழுமங்களின் இயக்குநா்கள் மருத்துவா்கள் செந்தில்குமாா், பாலமுருகன் வரவேற்றனா். போத்தனூா் காவல் ஆய்வாளா் கஸ்தூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com