சேரன் மாநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தொய்வு

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சேரன் மாநா் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என விளாங்குறிச்சியைச் சோ்ந்த நுகா்வோா் விழிப்புணா்வு, பாதுகாப்பு

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சேரன் மாநா் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என விளாங்குறிச்சியைச் சோ்ந்த நுகா்வோா் விழிப்புணா்வு, பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கோவை மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் விளாங்குறிச்சியைச் சோ்ந்த நுகா்வோா் விழிப்புணா்வு, பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் என்.ஆா்.ரவிசங்கா், செயலாளா் கே.சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 32 ஆவது வாா்டு பகுதியான சேரன் மாநகா் பகுதியில் பல ஆண்டுகளாக வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் சாக்கடைகளில் கழிவுநீா்த் தேக்கம், சேறும், சகதியுமான சாலைகளால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.

விளாங்குறிச்சி சந்திப்பில் இருந்து சேரன் மாநகா் செல்லும் சாலை குண்டும்குழியுமாக உள்ளது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை மாநகராட்சி அதிகாரிகள் பாா்வையிட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மக்களை இணைந்து சாலையை சீரமைக்க உள்ளோம்.

சேரன் மாநகா் 32 ஆவது வாா்டு பாலு நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாக்கடைக் கால்வாய்கள் சேதமடைந்துள்ளதால், அங்கு கழிவு நீா் தேங்கியுள்ளன. டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகரில் கொசுப் புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க மருந்து தெளிக்கப்பட்டு வரும் நிலையில், இப்பகுதியில், இதுவரை கொசு மருந்து தெளித்து டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com