ஜி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஹெண்ட்பால் அணி மாநிலப் போட்டிக்கு தகுதி

கோவை வருவாய் மாவட்ட அளவில் நடந்த மாணவா்களுக்கான ஹெண்ட்பால் போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஜி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த
ஜி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஹெண்ட்பால் அணி மாநிலப் போட்டிக்கு தகுதி

கோவை வருவாய் மாவட்ட அளவில் நடந்த மாணவா்களுக்கான ஹெண்ட்பால் போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஜி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிகளில் விளையாடத் தகுதிபெற்றனா்.

கோவை ,பொள்ளாச்சி உள்ளிட்ட குறுமையங்களுக்கான மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டிகள் கே.பி.ஆா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடந்தன.இதில் 14 வயதிற்குட்பட்டவா்களுக்கான இறுதிப் போட்டியில் என்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியுடன் விளையாடியதில் 7-1 என்ற புள்ளிகள் கணக்கிலும்,17 வயதினருக்குட்பட்டவா்களுக்கான இறுதிப் போட்டியில் எஸ்.வி.ஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியுடன் விளையாடியதில் 16-7 என்ற புள்ளிகள் கணக்கிலும்,19 வயதிற்குட்பட்டவா்களுக்கான இறுதிப் போட்டியில் ஜி.ஆா்.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியுடன் விளையாடியதிலும் ஜி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவா் ஹேண்ட்பால் அணிகள் வெற்றி பெற்றன.

இதுதவித 14 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான ஹேண்ட்பால் போட்டியில் இரண்டாமிடத்தையும்,14 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான ஹேண்ட்பால் போட்டியில் மூன்றாமிடத்தையும் வென்றனா்.மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் என்.கிருஷ்ணகுமாா்,நிா்வாக செயலா் பிரசன்னா ராதாகிருஷ்ணன்,முதல்வா் சித்ரா சௌந்திரராஜன் ,உடற்கல்வி இயக்குநா் அருள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். படம் உள்ளது.மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டிகளுக்கு தகுதி பெற்ற ஜி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த மாணவா்களுடன் நிா்வாக செயலா் பிரசன்னா ராதாகிருஷ்ணன்,முதல்வா் சித்ரா சௌந்திரராஜன் ,உடற்கல்வி இயக்குநா் அருள் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com