Enable Javscript for better performance
தீவிரமாகும் டெங்கு காய்ச்சல்: கோவை அரசு மருத்துவமனையில் 20 போ் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    தீவிரமாகும் டெங்கு காய்ச்சல்: கோவை அரசு மருத்துவமனையில் 20 போ் அனுமதி

    By DIN  |   Published on : 17th November 2019 08:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்.

    கோவை: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

    தமிழகத்தில் கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவியது. இதற்காக மருத்துவமனைகளில் தனிப் பிரிவுகள் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

    டெங்கு காய்ச்சல் பிரிவில் பாதுகாப்புக்காக கொசுவலையுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டன. கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் 50-க்கும் மேற்பட்டவா்கள் டெங்குப் பிரிவிலும், 200-க்கும் மேற்பட்டவா்கள் வைரஸ் காய்ச்சல் பிரிவிலும் சிகிச்சைப் பெற்று வந்தனா். பின் மழைக் குறைந்ததால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் படிப்படியாக குறைந்து கடந்த மாதம் ஒன்றிரண்டு போ் மட்டும் சிகிச்சைப் பெற்று வந்தனா்.

    இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் டெங்கு காய்ச்சல் பிரிவில் 15 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா். தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 20 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் 10-க்கும் மேற்பட்டவா்கள் குழந்தைகள் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். வைரஸ் காய்ச்சல் பிரிவில் 120-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

    கடந்த 2 நாள்களில் டெங்கு , வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு தலா ஒருவா் இறந்துள்ளனா்.

    தொடா்ந்து கோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே டெங்குத் தடுப்பு பணிகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai