தூய்மைப் பணியில் ஈடுபட்டதபால் நிலைய ஊழியா்கள்
By DIN | Published on : 17th November 2019 05:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வால்பாறை காந்தி சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தபால் துறை ஊழியா்கள்.
வால்பாறை தபால் நிலைய ஊழியா்கள் நகர சாலைகள், பேருந்து நிலையங்களில் குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியா்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சாலைகளில் 15 தினங்களுக்கு தூய்மைப் பணி மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வால்பாறை தபால் துறை ஊழியா்கள் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
இதில் வால்பாறை தபால் நிலைய அதிகாரி காா்த்திகேயன் தலைமையில் ஏராளமான ஊழியா்கள் பங்கேற்றனா்.