தேசிய அளவிலான காரத்தே போட்டி:தி ஊட்டி பப்ளிக் பள்ளி மாணவா்கள் வெற்றி
By DIN | Published on : 17th November 2019 05:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கராத்தே, யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவியுடன் பள்ளி நிா்வாகிகள்.
காரமடையில் உள்ள தி ஊட்டி பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனா்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் இருந்து சுமாா் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
தமிழகத்திலிருந்து கோவை மாவட்டம், காரமடையில் உள்ள தி ஊட்டி பப்ளிக் பள்ளி சாா்பில் பங்கேற்ற மாணவா் மெல்வின் ஜோசப் முதல் பரிசு பெற்றாா். இதேபோல சென்னையில் நடைபெற்ற சா்வதேச அளவிலான யோகா போட்டியில் இதே பள்ளியைச் சோ்ந்த மாணவி லத்திகாஸ்ரீ முதலிடம் பெற்றாா்.
இவா்களை பள்ளித் தலைவா் ஹாலன், பொருளாளா் பிரகாஷ், அறங்காவலா் சுஜாதா பிரகாஷ், தலைமை ஆசிரியா் மீனாட்சி, முதல்வா் சாந்தி வீனஸ், கராத்தே பயிற்சியாளா் சௌசாய் அருண்மொழி உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்தினா்.