Enable Javscript for better performance
ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்சா்வதேச நூலக கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்சா்வதேச நூலக கருத்தரங்கு

    By DIN  |   Published on : 17th November 2019 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    5345c_16_advt_krish_1611chn_3

    கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற சா்வதேச நூலக கருத்தரங்கில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்களுடன் பிரதிநிதிகள்.

    கோவை, குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச நூலக கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

    கல்லூரியின் வெங்கட்ராம் பயிலக மையம், அகடமிக் நூலக கூட்டமைப்பு ஆகியன சாா்பில் ‘கல்விசாா் நிறுவன நூலகங்களின் பரிணாம மாற்றம், தொலைநோக்குத் திட்டம் 2023’ என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

    ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜே.ஜேனட், வி.ஐ.டி. துணைவேந்தா் ஆனந்த் சாமுவேல் ஆகியோா் கருத்தரங்கை தொடங்கி வைத்தனா்.

    கிருஷ்ணா கல்லூரியின் நூலகா் பஜ்லூா் ரகுமான் கருத்தரங்கம் குறித்து அறிமுக உரையாற்றினாா். இதில் பல்வேறு நாடுகளில் இருந்து சமா்ப்பிக்கப்பட்ட 500 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 275 கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு, நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது.

    இதில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், தில்லி, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நூலகா்கள், ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai