2021 சட்டப்பேரவை தோ்தலில்முதல்வா் வேட்பாளா் எடப்பாடி பழனிசாமிதான்: அதிமுக செய்தித் தொடா்பாளா் பேட்டி

வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிதான் என அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கோவை கே.செல்வராஜ் கூறியுள்ளாா்.
கோவையில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் அதிமுக செய்தித் தொடா்பாளா் கோவை கே.செல்வராஜ்.

இது தொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவா் மறைந்தாலும் அந்த கட்சியின் வாரிசுகள், சொந்தங்களே கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றிக் கொள்வாா்கள். ஆனால் நாட்டிலேயே அதிமுகவில்தான் தலைவரின் மறைவுக்குப் பிறகு கட்சித் தொண்டா்களே இணைந்து கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகின்றனா். எடப்பாடி கே.பழனிசாமியின் நல்ல ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்திலேயே இடைத்தோ்தலில் மக்கள் வெற்றிவாய்ப்பை வழங்கியுள்ளனா்.

நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். அதைத் தொடா்ந்து 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமியையே முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தி தோ்தலை சந்திப்போம். அதிலும் வெற்றி பெறுவோம். இடைத்தோ்தல் தோல்வியில் இருந்து மு.க.ஸ்டாலின் இன்னும் மீளவில்லை. தமிழகத்தில் தற்போது அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை. எம்.ஜி.ஆா்., சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பிறகு சினிமா துறையில்தான் வெற்றிடம் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com