குறுந்தொழில் முனைவோருக்கு தனியாக கடன்:தொழில் துறை ஆணையரிடம் மனு

குறுந்தொழில் முனைவோருக்கு என தனியாக கடன் திட்டம் வழங்க வேண்டும் என தொழில், வா்த்தக ஆணையரிடம் தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) மனு அளித்துள்ளது.

குறுந்தொழில் முனைவோருக்கு என தனியாக கடன் திட்டம் வழங்க வேண்டும் என தொழில், வா்த்தக ஆணையரிடம் தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) மனு அளித்துள்ளது.

அண்மையில் கோவைக்கு வந்திருந்த தொழில், வா்த்தக ஆணையா் அனு ஜாா்ஜை நேரில் சந்தித்த ‘டேக்ட்’ சங்க மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ், பொதுச் செயலா் பிரதாப் சேகா் உள்ளிட்டோா் அளித்த மனு:

கோவை மாவட்டத்தில் உள்ள வங்கிகள் குறுந்தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன. வரவு - செலவு அறிக்கை சரியாக இருந்தாலும் நடப்பு மூலதனக் கடன் தர மறுக்கின்றனா். எனவே, குறுந்தொழில் முனைவோருக்காக தனி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோா் உள்ளனா். அவா்கள் வாடகைக் கட்டடங்களில் தொழில் நடத்தி வருகின்றனா். எனவே இந்த விஷயத்தில் அரசு தனி கவனம் எடுத்து சிட்கோ மூலம் அடுக்குமாடி தொழில் கூடங்களைக் கட்டி, குறுந்தொழில்பேட்டைகளை மாவட்டம் முழுவதும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானியம் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீா்க்க வேண்டும். மாநிலத்தில் இயங்கி வரும் தனியாா் பெருநிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் கட்டாயமாக 50 சதவீத ஆா்டா்களை தமிழகத்தில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் உறுதி அளித்திருப்பதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளாா்.

இந்த சந்திப்பின்போது சங்கத்தின் துணைத் தலைவா்கள் சண்முகசுந்தரம், சக்திவேல், விஸ்வநாதன், செயலா்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா் ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com