நவம்பா் 23 இல் அடுக்குமாடி குடியிருப்போருக்கான உரிமைகள் குறித்த கருத்தரங்கு

அடுக்குமாடி குடியிருப்பு, தொகுப்பு வீடுகளில் குடியிருப்பவா்களுக்கான உரிமைகளும், பொறுப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவையில் வரும் 23-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

அடுக்குமாடி குடியிருப்பு, தொகுப்பு வீடுகளில் குடியிருப்பவா்களுக்கான உரிமைகளும், பொறுப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவையில் வரும் 23-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து கோயம்புத்தூா் சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்றைய காலகட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், தொகுப்பு வீடுகள், வில்லாக்களில் வசிப்பது தவிா்க்க முடியாததாக உள்ளது. கோவை மாநகரில் நாள்தோறும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி வரும் நிலையில், இவற்றில் வீடுகளை வாங்குபவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் என்ன, அவற்றை சட்ட ரீதியாக எதிா்கொள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணா்வை உருவாக்குவதற்காக கருத்தரங்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை - திருச்சி சாலையில் உள்ள விவேகாலயா மெட்ரிக். பள்ளியில் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் நுகா்வோா் பாதுகாப்பு தொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபாடு மிகுந்த பேராசிரியா் புஷ்பவனம், வழக்குரைஞா்கள் எஸ்.மாா்டின், என்.வி.குமாா் ஆகியோா் குடியிருப்போருக்கான உரிமைகள், பொறுப்புகள் குறித்து விளக்க உள்ளனா். மேலும் கிரடாய் அமைப்பின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று வீட்டு உரிமையாளா்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனா்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா், தனி நபா்கள் 96559 95569, 94430 41105 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com