மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
கோவை, ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள்.
கோவை, ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள்.

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டி மையம், செஷயா் ஹோம்ஸ் மனநல காப்பகம், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் சமூக பணித் துறை ஆகியன இணைந்து இம்முகாமை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடத்தின.

முகாமை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தொடங்கி வைத்தாா். இதில் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தொழில் நிறுவனங்கள், ஜவுளி, காப்பீடு, மருத்துவமனைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தனியாா் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்தனா்.

இது குறித்து செஷயா் ஹோம்ஸ் தலைவா் கோவிந்தராஜ் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் நலவாழ்வுக்காக கடந்த 10 ஆண்டுகளாக 12 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பல ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா். இந்த முகாமில் நூற்றுக்கணக்கானோா் வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்பு உள்ளது என்றாா்.

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனா். அவா்களுக்கு இதுபோன்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது மட்டுமின்றி சுயதொழில் தொடங்கவும் கடன் உதவிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.

இந்த முகாமுக்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com