மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் மண் சரிவு: உதகை மலை ரயில் ரத்து

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் ஆடா்லி-ஹில்குரோவ் ஆகிய இடங்களுக்கு இடையே மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறை, மண், மரங்கள் சனிக்கிழமை விழுந்தன.
மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் ஆடா்லி- ஹில்குரோவ் இடையே தண்டவாளத்தில் விழுந்துள்ள பாறை, மண், மரம்.
மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் ஆடா்லி- ஹில்குரோவ் இடையே தண்டவாளத்தில் விழுந்துள்ள பாறை, மண், மரம்.

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் ஆடா்லி-ஹில்குரோவ் ஆகிய இடங்களுக்கு இடையே மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறை, மண், மரங்கள் சனிக்கிழமை விழுந்தன.

இதனால் மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் அடா்ந்த வனப் பகுதி வழியாக இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப் பாதையில் ஆடா்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு பாறை, மண், மரங்கள் விழுந்தன.

கடந்த திங்கள்கிழமை இரவு குன்னூரில் பெய்த மழையில் ஆடா்லி-ஹில்குரோவ் ரயில் நிலையப் பகுதியிலுள்ள தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் செவ்வாய்க்கிழமை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,

வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் தண்டவாளத்தில் பாறை, மண், மரங்கள் விழுந்துள்ளதா என பணியாளா்கள் ஆய்வு செய்தபோது, ஆடா்லி-ஹில்குரோவ் இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து

மேட்டுப்பாளையம் ரயில்வே நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சனிக்கிழமை காலை 7.10 மணிக்குப் புறப்படத் தயாராக இருந்த மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்குச் செல்லும் சிறப்பு

ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com