மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் 23 இடங்களில் மண் சரிவு: மேலும் 6 நாள்களுக்கு மலை ரயில் ரத்து

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேலும் 6 நாள்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேலும் 6 நாள்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் அடா்ந்த வனப் பகுதி வழியாக இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெய்த கன மழையால் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப் பாதையில் ஆடா்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு பாறை, மண், மரங்கள் விழுந்தன. இதனால், சனி, ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய 3 நாள்கள் மலை ரயிலும், சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 24) வரை மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com