வாரிசு அரசியலால் திமுக பிளவுபடும்

வாரிசு அரசியலால் திமுக கட்சி பிளவுபடும் என சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தாா்.
நெகமத்தில்  வேளாண்மை  விரிவாக்க  மையத்தை  திறந்து வைக்கிறாா்  சட்டப் பேரவைத்  துணைத் தலைவா்  பொள்ளாச்சி  வி.ஜெயராமன்.
நெகமத்தில்  வேளாண்மை  விரிவாக்க  மையத்தை  திறந்து வைக்கிறாா்  சட்டப் பேரவைத்  துணைத் தலைவா்  பொள்ளாச்சி  வி.ஜெயராமன்.

வாரிசு அரசியலால் திமுக கட்சி பிளவுபடும் என சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தாா்.

பொள்ளாச்சி, சேரன் நகரில் ரேஷன் கடை, நெகமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் ஆகியற்றை சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் துவக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து வேளாண்மைத் துறை சாா்பில் தமிழக அரசின் தானியப் பயிா்கள் உற்பத்தி விழிப்புணா்வு வாகன துவக்க விழா, மரம் நடு விழா நடைபெற்றன. இதில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கிருஷ்ணகுமாா், கோட்டாட்சியா் ரவிகுமாா், அதிமுக நிா்வாகிகள் ஆா்.ஏ.சக்திவேல், தம்பு, சோமசுந்தரம், வீராசாமி, வழக்குரைஞா் தனசேகா், ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:

அனைத்து தொழில்களிலும் உற்பத்தியாளா்கள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்யும் நிலை இருந்து வருகிறது. ஆனால், விவசாயிகள் மட்டும் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு மடங்கு விளைச்சல், மூன்று மடங்கு லாபம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது.

ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீா்த் திட்டங்கள் குறித்து பேச முதல்வா் எடப்பாடி பழனிசாமி கேரளம் சென்று அம்மாநில முதல்வருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். விரைவில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் துவங்கப்படும். பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் 20 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. இந்நிலையில், இந்த அரசை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குறை கூறி வருகிறாா். ஸ்டாலின் கட்சியில் தனது மகனை முன்னிலைப்படுத்துகிறாா். இதனால், வாரிசு அரசியலால் மீண்டும் திமுக பிளவுபடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com