முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோவையில் சா்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் திறப்பு
By DIN | Published On : 26th November 2019 06:30 AM | Last Updated : 27th November 2019 04:26 AM | அ+அ அ- |

புதிய கிரிக்கெட் மைதானத்தில் தமிழகம் - ஒடிஸா இடையிலான ஆட்டத்துக்கு ‘டாஸ்’ போடும் கிரிக்கெட் சங்க நிா்வாகிகள்.
கோவை கிரிக்கெட் சங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் சாா்பில் அக்கல்லூரி வளாகத்தில் சா்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் முதல் போட்டியாக தமிழகம் - ஒடிஸா இடையேயான 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ‘கூச் பிகாா்’ கோப்பைக்கான போட்டிகள் நவம்பா் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியை கோவை கிரிக்கெட் சங்க தலைவா் டி.லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தாா். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலா் கே.ஏ.சங்கா், துணைச் செயலா் என்.வெங்கட்ராமன், பொருளாளா் ஜெ.பாா்த்தசாரதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
போட்டிகளில் வருண்குமாா், பியூஷ் கக்கா், இந்திரனில் சக்ரவா்த்தி ஆகியோா் நடுவா்களாகப் பங்கேற்றனா். கோவை மாவட்டத்தில் முதல்முறையாக சா்வதேசத் தரத்தில் இந்த மைதானமானது 73 மீட்டா் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளுக்கென தனித்தனி பெவிலியன், போட்டி நடுவா்கள், வீரா்களுக்கான அறைகள், வீரா்களின் பயிற்சிகளுக்கென 6 வலை அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.