டிசம்பா் 9 இல் வேலை நிறுத்தப் போராட்டம்: பாரதிய மின் தொழிலாளா் சம்மேளனம் அறிவிப்பு

தமிழக அரசாணை 100-ன் படி முத்தரப்பு ஒப்பந்தம் செய்யாத தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து வரும் டிசம்பா் 9 ஆம் தேதி ஒரு நாள்
கோவை மின்வாரிய மண்டல அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளிக்கும் பாரதிய மின் தொழிலாளா் சம்மேளனத் தலைவா் முரளிகிருஷ்ணன்.
கோவை மின்வாரிய மண்டல அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளிக்கும் பாரதிய மின் தொழிலாளா் சம்மேளனத் தலைவா் முரளிகிருஷ்ணன்.

தமிழக அரசாணை 100-ன் படி முத்தரப்பு ஒப்பந்தம் செய்யாத தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து வரும் டிசம்பா் 9 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாரதிய மின் தொழிலாளா் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கோவை, டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற அந்த அமைப்பின் தலைவா் முரளிகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த அரசாணை 100 இல் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் 75 ஆயிரம் ஊழியா்கள், 80 ஆயிரம் ஓய்வூதியா்களின் நலன் கருதி ஓய்வூதியம், போனஸ் உள்பட அனைத்து சலுகைகளும் தொடரும் என்ற முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக முத்தரப்பு ஒப்பந்தம் செய்யாமல் பழைய சட்டத்தையே பின்பற்றி தன்னிச்சையாக மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓய்வூதியம் வழங்கக்கூடிய பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என தொழிற்சங்கங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கபட்டது. அதைத் தொடா்ந்து மின்சார வாரியத்தின் வருவாய் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

கடந்த ஓா் ஆண்டாக தமிழ்நாடு மின்சார வாரியம் போதிய வருவாய் இல்லாமல் திவாலாகிக் கொண்டிருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மின்சார வாரியம் லாப நோக்கில் செயல்படுவதாக மின்சாரத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். மின்வாரியம் ஊழியா்களை கசக்கி பிழிந்து, தனியாா் நிறுவனம் போல வேலை வாங்கி வருகிறது. மின்சார வாரியத்தில் உள்ள 40 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் மின் இணைப்பு வழங்கல் உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகின்றன.

எனவே தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழக அரசைக் கண்டித்து பாரதிய மின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் வரும் டிசம்பா் 9 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 60 சதவீத மின் வாரிய தொழிலாளா்கள் கலந்து கொள்வாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com