Enable Javscript for better performance
கொடிசியாவில் இன்று சுய வேலைவாய்ப்பு கடன் திட்டக் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    கொடிசியாவில் இன்று சுய வேலைவாய்ப்பு கடன் திட்டக் கருத்தரங்கு

    By DIN  |   Published on : 28th November 2019 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் கொடிசியாவில் வியாழக்கிழமை (நவம்பா் 28) நடைபெறுகிறது.

    இதுகுறித்து ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கோவை மாவட்ட தொழில் மையத்தில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளிடமும் கொண்டு சோ்க்கும் வகையில் இந்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. கொடிசியா வளாகத்தில் இந்தக் கருத்தரங்கம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்கள் தொடா்பான தகவல்கள் அளிக்கப்படும்.

    சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் கீழ் பயன்பெற பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்களாா் அட்டை, குடும்ப அட்டை இல்லாதவா்கள் இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, இயந்திரத்துக்கான விலைப் புள்ளி, வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் 2 நகல்களுடன் இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai