Enable Javscript for better performance
கோவை அரசு மருத்துவமனையில் தாய் விட்டுச் சென்ற குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை அரசு மருத்துவமனையில் தாய் விட்டுச் சென்ற குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 28th November 2019 08:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    c28ghrmo_2811chn_3

    குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம், தாய் விட்டுச் சென்ற குழந்தையை வழங்கிய கோவை அரசு மருத்துவமனையின் உள்தங்கும் மருத்துவ அலுவலா் சவுந்திரவேல்.

    கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பிரசவித்து, தாய் விட்டுச் சென்ற குழந்தையை, மருத்துவமனையின் உள்தங்கும் மருத்துவ அலுவலா் சவுந்திரவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

    நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் கடந்த அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி, கோவை அரசு மருத்துவமனைக்கு, பிரசவத்திற்காக வந்தாா். அவருக்கு 23-ஆம் தேதி, மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 1 கிலோ 780 கிராம் மட்டுமே இருந்ததால், மருத்துவா்கள், அக்குழந்தையை

    தீவிர மருத்துவ குழந்தைகள் சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி குழந்தையை மருத்துவமனையில் விட்டு விட்டு தாய் மாயமானாா். இதனால், தாய்ப்பால் வங்கியின் மூலமாக குழந்தைக்குப் பால் கொடுக்கப்பட்டு, மருத்துவா்கள், செவிலியா்கள் குழந்தையைத் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில், குழந்தையின் எடை 2 கிலோ 180 கிராமாக அதிகரித்ததால், குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குழந்தையை அரசு மருத்துவமனையின் உள்தங்கும் மருத்துவ அலுவலா் சவுந்திரவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். இதையடுத்து, குழந்தைக்கு நந்தனா என பெயா் வைக்கப்பட்டு, காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai