Enable Javscript for better performance
தனியாா் கட்டுமான சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    தனியாா் கட்டுமான சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானைகள்

    By DIN  |   Published on : 28th November 2019 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    img_20191127_wa0006_2711chn_145_3

    காட்டு யானைகளால் இடித்து சேதப்படுத்தப்பட்ட சுற்றுச் சுவா்.

    கோவைப்புதூா் அருகே தனியாா் கட்டுமான சுற்றுச் சுவரை 2 காட்டு யானைகள் உடைத்து செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தின.

    கோவைப்புதூா், பெருமாள் கோயில் பின்புறம் உள்ள பிரஸ் காலனி அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான 10.50 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்போது வீடுகள் கட்டுப்பட்டு வருகின்றன. இதனால் இந்த இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்த 2 காட்டு யானைகள் சுற்றுச் சுவரை உடைத்து உள்ளே சென்றன. பின்னா் மறுபுறத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து வெளியே வந்த யானைகள் அப்பகுதியில் இருந்த விவசாய நிலத்தில் புகுந்து தக்காளிச் செடிகளை சேதப்படுத்தின. பின் அங்குள்ள தொட்டியில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு அருகே உள்ள வனப் பகுதிக்குள் சென்றன. நீண்ட நாள்களுக்கு பிறகு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai