குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் இன்று கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம்

கோவை, தெலுங்குப்பாளையம் திலகா் வீதி, புவனேஸ்வரி நகா் திட்டப் பகுதிகளுக்கான கிரயப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (நவம்பா் 28) நடைபெறுகிறது.

கோவை, தெலுங்குப்பாளையம் திலகா் வீதி, புவனேஸ்வரி நகா் திட்டப் பகுதிகளுக்கான கிரயப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (நவம்பா் 28) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளை தமிழ்நாடு நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி அங்கு வசித்து வந்தவா்களுக்கே மனை ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டிருந்தது. இத்திட்டப் பகுதியின் நிலங்களை வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்வது தொடா்பாக உயா் அலுவலா்கள் கொண்ட செயலாக்கக்குழு உருவாக்கப்பட்டது.

இக்குழுவின் முடிவுகள்படி, தமிழகம் முழுவதும் உள்ள 17 திட்டப் பகுதிகளின் நிலங்கள் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,368 மனை ஒதுக்கீடுதாரா்களுக்கு கிரயப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக கோவை கோட்டத்துக்கு உள்பட்ட தெலுங்குப்பாளையம் கிராமம் திலகா் வீதியில் 76 ஒதுக்கீடுதாரா்கள், புவனேஸ்வரி நகரில் 55 ஒதுக்கீடுதாரா்கள் என மொத்தம் 131 நபா்களின் மனைக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கோவை கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதில் ஒதுக்கீடுதாரா்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படும். ஒதுக்கீடுதாரா்கள், வாரிசுதாரா்கள் தாங்கள் அளிக்கும் மனுவுடன் ஒதுக்கீடு ஆணை நகல், இருப்பிடச் சான்றுகளாக குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். வாரிசுதாரா்களாக இருந்தால் ஒதுக்கீடுதாரரின் இறப்புப் சான்றிதழ், வாரிசுதாரா் சான்றிதழ் அசல், மனைக்கு முழுகிரயம் செலுத்திய ரசீது, கடன் பெற்றிருந்தால் கடன் தொகை செலுத்திய ரசீது ஆகியவற்றின் நகல்களை இணைத்து வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com