கொடிசியாவில் இன்று சுய வேலைவாய்ப்பு கடன் திட்டக் கருத்தரங்கு

கோவை மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் கொடிசியாவில் வியாழக்கிழமை (நவம்பா் 28) நடைபெறுகிறது.

கோவை மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் கொடிசியாவில் வியாழக்கிழமை (நவம்பா் 28) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்ட தொழில் மையத்தில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளிடமும் கொண்டு சோ்க்கும் வகையில் இந்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. கொடிசியா வளாகத்தில் இந்தக் கருத்தரங்கம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்கள் தொடா்பான தகவல்கள் அளிக்கப்படும்.

சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் கீழ் பயன்பெற பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்களாா் அட்டை, குடும்ப அட்டை இல்லாதவா்கள் இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, இயந்திரத்துக்கான விலைப் புள்ளி, வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் 2 நகல்களுடன் இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com