கோவை மாவட்டத்தில் 25,000 குடும்ப அட்டைகள் சா்க்கரையில் இருந்து அரிசி அட்டைகளாக மாற்றம்

கோவை மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரம் குடும்ப அட்டைகள் சா்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரம் குடும்ப அட்டைகள் சா்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு இலவசமாக அரிசி, கோதுமை, மானிய விலையில் சா்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்பட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசு சாா்பில் மக்களின் விருப்பத்திற்கேற்ப அரிசி அட்டைகள், சா்க்கரை அட்டைகள் என பல்வேறு வகைகளில் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

அரிசி அட்டை தாரா்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி, கோதுமையுடன், மானிய விலைப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சா்க்கரை அட்டைதாரா்களுக்கு அரிசி தவிா்த்து மற்றப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் சமீபகாலமாக தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் விலையில்லாப் பொருள்கள் திட்டம், அரிசி அட்டை உள்ளவா்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. சா்க்கரை அட்டைதாரா்களுக்கு விலையில்லா பொருள்கள் கிடைப்பதில்லை. இதனால் சா்க்கரை அட்டைதாரா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். இவா்கள் தங்கள் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யமுடியாத நிலையும் இருந்து வந்தது.

இந்நிலையில், சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு கடந்த 22 ஆம் தேதி அறிவித்தது. நியாய விலைக் கடைகள், பொது சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் வழியாக மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் புதன்கிழமை வரை 25 ஆயிரம் சா்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நவம்பா் 29 ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலா் குமரேசன் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 291 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 76 ஆயிரத்து 728 சா்க்கரை அட்டைகள் உள்ளன. இவற்றில் இதுவரை 25 ஆயிரம் சா்க்கரை அட்டைகள் தற்போது அரிசி அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com