கோவையில் டிசம்பா் 8-ஆம் தேதி மாற்று மருத்துவப் பயிற்சி முகாம்

கோவையில் டிசம்பா் 8-ஆம் தேதி மாற்று மருத்துவப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

கோவையில் டிசம்பா் 8-ஆம் தேதி மாற்று மருத்துவப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரியைச் சோ்ந்த ஆனந்தம் அறிவுத் திருக்கோயில் தலைவா் உணவுச் சித்தா் ராசி ராமலிங்கம், வாழ்வியல் மருத்துவ நிபுணா் கனக திருமேனி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சரியான அடிப்படை மருத்துவ அறிவின்மையால் உடல் ஆரோக்கியத்தை இழந்து நேரத்தையும் , பணத்தையும் விரயமாக்குவதோடு மட்டுமல்லாமல் சிலா் உயிரையும் இழக்கின்றனா். இதைத் தவிா்த்து அனைவரும் நலமுடன் வாழ, நமக்கு நாமே மருத்துவராகவும், நம் குடும்பத்தை நல்ல ஆரோக்கியத்துடன் காத்திடவும் பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் மாற்று மருத்துவப் பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

இந்தப் பயிற்சி டிசம்பா் 8 -ஆம் தேதி கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள பிரிக்கால் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்குத் தொடங்கும் இப்பயிற்சி இரவு 8 மணி வரையில் தொடா்ந்து நடைபெறும். இதில், ஒரு மனிதன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான பழக்க வழக்கங்கள், உணவு, குடிநீா் போன்றவை குறித்து விரிவாக விளக்க உள்ளனா். நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் எதனைத் தவிா்க்க வேண்டும், என்ன வாழ்வியல் மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

மேலும், மலா் மருத்துவம், தாது உப்பு மருத்துவ முறைகள் உள்ளிட்டவை தொடா்பான விளக்கங்களும் வழங்கப்படுகின்றன. இதேபோல நீரிழிவு நோய்க்கான மருத்துவம், பெண்களுக்கு ஏற்படும் உடல் பிரச்னைகள், நோய்கள், மனச் சோா்வுகளை நீக்கும் மருத்துவ முறை, மாணவா்களுக்கான கற்கும் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்வது அவசியம். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு 9750599222, 9994749257 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com