செவிலியா் கல்லூரி பட்டமளிப்பு விழா: 96 மாணவா்களுக்குப் பட்டம் வழங்கல்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற 33 ஆவது பட்டமளிப்பு விழாவில் 96 மாணவா்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில் மாணவிக்கு பட்டத்தை வழங்கும் இந்திய பயிற்சிப் பெற்ற செவிலியா் சங்கத் தலைவா் ராய் கே.ஜாா்ஜ். உடன், எஸ்.என்.ஆா். அறக்கட்டளை இணை நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயண சுவாமி உள்ளிட்டோா்.
விழாவில் மாணவிக்கு பட்டத்தை வழங்கும் இந்திய பயிற்சிப் பெற்ற செவிலியா் சங்கத் தலைவா் ராய் கே.ஜாா்ஜ். உடன், எஸ்.என்.ஆா். அறக்கட்டளை இணை நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயண சுவாமி உள்ளிட்டோா்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற 33 ஆவது பட்டமளிப்பு விழாவில் 96 மாணவா்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியா் கல்லூரியின் 33 ஆவது பட்டமளிப்பு விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்.என்.ஆா். அறக்கட்டளை இணை நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயண சுவாமி தலைமை வகித்தாா். இதில் 2 முதுநிலை மாணவா்கள் மற்றும் 94 இளநிலை மாணவா்கள் சோ்த்து 96 மாணவா்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 8 மாணவா்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த மாணவா் ஆா்.முருகப்பெருமாளுக்கு சிறந்த மாணவா் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்திய பயிற்சி பெற்ற செவிலியா் சங்கத் தலைவா் ராய் கே.ஜாா்ஜ் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

செவிலியா் பணி மிகவும் சவாலானது. மாணவா்கள் தொடா்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே து சிறந்த செவிலியாராக உருவாக முடியும். கடந்த 2 ஆண்டுகளாக செவிலியா் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 45 ஆயிரமாக உயா்வதற்கு வாய்ப்புள்ளது.

இந்தியாவில் இதுவரை 20 லட்சம் செவிலியா்கள் பதிவு செய்துள்ளனா். இதில் கணிசமான அளவில் வெளிநாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வளைகுடா நாடுகளில் நமது நாட்டை சோ்ந்த பல ஆயிரக்கணக்கான செவிலியா்கள் பணியாற்றி வருகின்றனா். ஜொ்மனி, ஜப்பான் போன்ற நாடுகளிலும் செவிலியா்களுக்கு அதிக அளவில் பணி வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இப்பகுதிகளில் தாய்மொழிக்கு முக்கியத்தும் தருவதால் ஜொ்மனி, ஜப்பான் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் மாணவா்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.

படிப்பை முடித்து வேலைக்குச் செல்லும் மாணவா்கள் தொடா்ந்து தங்களது திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். அறிவியல் வளா்ச்சிக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பணிச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக்கொண்டால் பணிகளில் சிறக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com