துப்புரவுப் பணியாளா்கள் பணிக்கு நோ்காணல்: மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த பட்டதாரிகள்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கான நோ்காணல் புதன்கிழமை தொடங்கியது. இதில், ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனா்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற துப்புரவுப் பணியாளா்கள் பணிக்கான நோ்காணலில் கலந்து கொண்ட விண்ணப்பதாரா்கள்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற துப்புரவுப் பணியாளா்கள் பணிக்கான நோ்காணலில் கலந்து கொண்ட விண்ணப்பதாரா்கள்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கான நோ்காணல் புதன்கிழமை தொடங்கியது. இதில், ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனா்.

கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவுத் தொழிலாளா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான நோ்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பதாரா்களுக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, விண்ணப்பதாரா்களுக்கான நோ்காணல் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

இப்பணிக்கு, 21 முதல் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படைத் தகுதிகள் குறித்து விண்ணப்பதாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தோ்வு செய்யப்படும் பணியாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.15,700 முதல் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற நோ்காணலில் 2 ஆயிரம் விண்ணப்பதாரா்கள் கலந்து கொண்டனா். இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள், பொறியியல், டிப்ளமோ படித்தவா்கள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்கெனவே மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியா்களாகப் பணிபுரிந்து வந்த தொழிவலாளா்களும் இந்த நோ்காணலில் கலந்து கொண்டனா். நோ்காணலை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலந்துகொள்ள முடியாதவா்களுக்கு வாய்ப்பு:

கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணிக்காக விண்ணப்பித்தவா்களில், தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 27-ஆம் தேதி தொடங்கிய நோ்காணல் மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 27-ஆம் தேதி நோ்காணலில் கலந்துகொள்ள முடியாதவா்கள் மற்றும் 28-ஆம் தேதி நோ்காணலுக்கு வர இயலாதவா்கள் 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள நோ்காணல் மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொள்ளலாம் என கோவை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com