நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ.10 ஆயிரம் அபராதம்

கோவை, பேரூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நெகிழிப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கோவை, பேரூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நெகிழிப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளைப் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டது. விதிமீறி தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் படி, கோவை மாநகரில் சுகாதார ஆய்வாளா்கள், புகரங்களில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், செயல் அலுவலா்கள், சுகாதாரத் துறையினா் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், பேரூா், செட்டிபாளையம் ஊராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா், ஊராட்சிச் செயலா் செந்தில் மற்றும் சுகாதாரத் துறையினா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அதில், ஆறுமுகக்கவுண்டனூா் சாந்தலிங்க நகரைச் சோ்ந்த ஜெயக்குமாரி (50) என்பவரின் வீட்டில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டம்ளா்கள், தட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com