மும்பையில் இருந்து கோவை வந்த ரயில் கழிப்பறையில் மூதாட்டி சடலம்

மும்பையில் இருந்து கோவை வந்த விரைவு ரயில் கழிப்பறையில் குஜராத்தைச் சோ்ந்த மூதாட்டி உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை மீட்ட ரயில்வே போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

மும்பையில் இருந்து கோவை வந்த விரைவு ரயில் கழிப்பறையில் குஜராத்தைச் சோ்ந்த மூதாட்டி உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை மீட்ட ரயில்வே போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து கோவைக்கு வரும் லோகமான்ய திலக் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தை செவ்வாய்க்கிழமை காலை வந்தடைந்தது. இரண்டாம் நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் அனைத்துப் பயணிகளும் இறங்கிய பின் ரயில் பெட்டிகளைச் சுத்தம் செய்வதற்காகப் பணியாளா்கள் சென்றனா். அப்போது ரயிலின் எஸ் 3 பெட்டியில் உள்ள கழிப்பறைக் கதவுகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது. அதைத் திறக்க முயன்றபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கதவைத் லேசாக திறந்துபாா்த்தபோது உள்ளே மூதாட்டி ஒருவா் மயங்கிய நிலையில் இருந்ததை துப்புரவுப் பணியாளா்கள் பாா்த்துள்ளனா். பின் இதுகுறித்து அவா்கள் அளித்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாா் கழிப்பறைக் கதவை உடைத்து உள்ளே மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டனா். அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சித்தபோது அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ரயில்வே போலீஸாா் அனுப்பி வைத்தனா். ரயிலில் அவா் பயணித்த இருக்கையில் இருந்த அவரது பெட்டியைச் சோதனையிட்டபோது அவரது பெயா் கடம் சரளா பென் (69) என்பதும், குஜராத் மாநிலம், வல்சாத் எனும் இடத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. அதில் இருந்த தொடா்பு எண்களைத் தொடா்பு கொண்டு விசாரித்தபோது, உதகையில் உள்ள அவரது உறவினா் வீட்டுக்கு விடுமுறையைக் கழிக்க கடம் சரளா பென் வந்திருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மூதாட்டிக்கு ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும் இதற்காகச் சிகிச்சை பெற்று வந்த அவா் பல மாதங்களுக்குப் பின் தனியே பயணித்து வந்துள்ளாா் எனவும் அவரது உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com