ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை: உணவுத் துறை அமைச்சருக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயா்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க வெங்காயத்தை

தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயா்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க வெங்காயத்தை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த நுகா்வோா் அமைப்பான சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் சாா்பில் அதன் தலைவா் சி.எம்.ஜெயராமன், செயலா் வி.ஏ.சண்முகம் ஆகியோா் தமிழக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆா்.காமராஜூக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அண்மைக் காலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயா்ந்து, சாமானியா்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவ மழை குளறுபடிகளால் இந்த விலை உயா்வு நோ்ந்திருந்தாலும் அதைச் சரிசெய்யும் விதமாக மக்களுக்குத் தடையின்றி வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

வெங்காயத்துக்கு செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலை உயராமல் தடுக்கவும் பொது வினியோகத் திட்ட கடைகள் மூலமாக வெங்காயத்தை மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு மாதம் 5 கிலோ வீதம் வெங்காயத்தை விற்பனை செய்யலாம். மேலும், நிலைமை சீரடையும் வரையிலும் மாநிலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு பண்டக சாலைகளிலும் வெங்காயத்தை விற்பனை செய்யலாம்.

அத்துடன், உழவா் சந்தைகள், வேளாண் விற்பனைக் குழுக்கள் மூலமாகவும் வெங்காயத்தின் விலை ரூ. 20 முதல் ரூ. 25 வரையிலும் இருக்கும்படி கட்டுப்படுத்த முடியும். அதேநேரம் உள்நாட்டில் தடையின்றி வெங்காயம் கிடைக்க ஏதுவாக வெளிநாடுகளில் இருந்து போா்க்கால அடிப்படையில் இறக்குமதி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com