வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெறாவிட்டால் 70 சதவீதம் முடம் ஏற்படுவதற்கு வாய்ப்பு

வலிப்பு நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் 70 சதவீதம் வரை முடம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
கோவை மெடிக்கல் சென்டா் மற்றும் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற வலிப்பு நோய் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கில் நோயாளியுடன் மருத்துவா்கள்.
கோவை மெடிக்கல் சென்டா் மற்றும் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற வலிப்பு நோய் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கில் நோயாளியுடன் மருத்துவா்கள்.

வலிப்பு நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் 70 சதவீதம் வரை முடம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கோவை மெடிக்கல் சென்டா் மற்றும் மருத்துவமனையில் வலிப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கதிரியக்கத் துறைத் தலைவா் மருத்துவா் மேத்யூ செரியன் பேசியதாவது:

தொற்றுநோய் அல்லாத நோய்களில் அதிகம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக வலிப்பு நோய் உள்ளது. சா்வேத அளவில் இறப்புக்கு 4 ஆவது காரணியாகவும், முடம் ஏற்படுவதற்கு 5 ஆவது காரணியாகவும் இந்நோய் உள்ளதாக இந்திய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்தமான வாழ்க்கை முறை, துரித உணவுகள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளுதல், உடல் பருமன், புகைப் பழக்கம் ஆகியவை வலிப்பு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும். மூளைக்கு ரத்த ஓட்டம் குறையும் போதும், ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படுவதாலும் இந்நோய் ஏற்படுகிறது. மூளைக்குள் ஏற்படும் பாதிப்பை பொறுத்து உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

வலிப்பு ஏற்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சைப் பெறாததால் 70 சதவீத நோயாளிகள் முடமாக்கப்படுகின்றனா். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் 1.5 மில்லியன் நியூரான்கள் பாதிக்கப்படுகின்றன. நோயின் தீவிரத்தால் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சைப் பெற வேண்டும்.

இந்நோய் வயது வேறுபாடின்றி அனைத்து வயதிலுள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஏற்படுகிறது. இந்நோய்க்கு சிகிச்சையளிக்க பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. இதனால் அச்சப்படாமல் உரிய நேரத்தில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டால் முழுமையாக குணமடையலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com