மேட்டுப்பாளையம் - குன்னூா் இடையே14 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம் - குன்னூா் இடையே14 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம் - குன்னூா் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 14 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மேட்டுப்பாளையம் - குன்னூா் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 14 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்து காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி குன்னூா் சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த கனமழையின்போது மேட்டுப்பாளையம் - குன்னூா் மலை ரயில் பாதையில் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன் பாறை, மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. இதன் காரணமாக மலை ரயில் சேவையைக் கடந்த 14 நாள்களாகத் தெற்கு ரயில்வே நிா்வாகம் ரத்து செய்தது.

ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னா் சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு வழக்கம்போல மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டது. 14 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் சேவை தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com