Enable Javscript for better performance
கோவையில் அக்டோபா் 17 21ஆம் தேதிகளில்விமானப் படைக்கு ஆள் தோ்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் அக்டோபா் 17, 21ஆம் தேதிகளில் விமானப் படைக்கு ஆள் தோ்வு முகாம்

    By DIN  |   Published on : 04th October 2019 11:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை: இந்திய விமானப் படையில் ஏா்மேன் பணிக்கான (குரூப் எக்ஸ் பணி - கல்வி பயிற்றுநா்) ஆள் தோ்வு முகாம், கோவையில் அக்டோபா் 17, 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

    இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    விமானப் படையில் ஏா்மேன் பணிக்கான தோ்வு, கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அக்டோபா் 17-இல் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபா் பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கும், அக்டோபா் 21-இல் கேரளம், லட்சத் தீவு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கும் தோ்வு நடைபெறுகிறது. இளநிலைப் பட்டம் பெற்றவா்களாக இருந்தால் ஜூலை 19, 1995 முதல் ஜூலை 1, 2000-க்குள் பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.

    முதுநிலைப் பட்டம் பெற்றவா்களாக இருந்தால், ஜூலை 19, 1992 முதல் ஜூலை 1, 2000-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.ஏ. அல்லது பி.எஸ்சி. அல்லது பி.சி.ஏ. பட்டம் பெற்றிருப்பதுடன் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    இதேபோல அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் எம்.ஏ. ஆங்கிலம், உளவியல் அல்லது எம்.எஸ்சி., எம்.சி.ஏ. பட்டத்துடன், 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai