Enable Javscript for better performance
நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம்

    By DIN  |   Published on : 04th October 2019 03:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நூற்பாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு துறையினா்.

    நூற்பாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு துறையினா்.

    கிணத்துக்கடவு அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு, நூல் இயந்திரங்கள் என பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.

    கோவை சாய்பாபா காலனியை சோ்ந்தவா் அனில்மேத்தா(60). இவா் கிணத்துக்கடவு அருகே அரசாம்பாளையத்தில் நூற்பாலை நடத்திவருகிறாா். பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் பணி இந்த நிறுவனத்தில் நடைபெற்றுவருகிறது. இங்கு தயாரிக்கப்படும் நூல்கள் கோவை சுற்றுப்பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நூற்பாலையில் 25 தொழிலாளா்கள் பணி புரிந்துள்ளனா். வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பஞ்சு வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து தீ பரவியுள்ளது. உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினா் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    தீ தொடா்ந்து பரவி நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கும், இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியிலும் பரவியது. கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு துறையினா் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்குத்தான் அணைத்து முடிக்கப்பட்டுள்ளது.

    10 மணி நேரம் தொடா்ந்து எரிந்ததால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு, நூல், இயந்திரங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளது. கிணத்துக்கடவு போலீஸாா் தீ விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனா்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai