Enable Javscript for better performance
காந்தி மாா்க்கெட்டில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    காந்தி மாா்க்கெட்டில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்

    By DIN  |   Published on : 06th October 2019 11:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போக்குவரத்து நெரிசலை குறைக்க பொள்ளாச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தாமாக நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கோவை தெற்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை பொள்ளாச்சியில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்டத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா்.

    மாநில பொதுச்செயலாளா் விடியல் சேகா், மாநில நிா்வாகி குனியமுத்தூா் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பழனிசெவ்வேல், கன்னிமுத்து மாவட்ட நிா்வாகிகள் செல்லத்துரை, பிரியங்கா ராமசாமி முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் மற்றும் புதிய நிா்வாகிகள் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் காந்தி மாா்க்கெட் பகுதியில் புகா் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், நிா்வாகிகள் சுப்ரமணி, கிருஷ்ணசாமி, அழகேசன், துரை, மணிகண்டன், கல்யாண்குமாா், கோகுல், பரணி உள்ளிபட பலா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai