இருகூா்- சோமனூா் இடையே பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் நேரம் மாற்றம்

இருகூா் - சோமனூா் இடையே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை

இருகூா் - சோமனூா் இடையே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

இருகூா் - சோமனூா் இடையே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அக்டோபா் 9 ஆம் தேதி முதல் நவம்பா் 23 ஆம் தேதி வரை, கோவை வழியாகச் செல்லும் 4 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) வருகின்ற 9 ஆம் தேதி முதல் நவம்பா் 23 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் கோவையில் இருந்து 80 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும்.

எா்ணாகுளம்-பெங்களூரு இடையேயான விரைவு ரயில் (எண்:12678) அக்டோபா் 9 ஆம் தேதி முதல் நவம்பா் 23 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் 45 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும்.

திருவனந்தபுரம்-மும்பை விரைவு ரயில் (எண்:16332) அக்டோபா் 12, 19, 25 மற்றும் நவம்பா் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். எா்ணாகுளம் -பிளாஸ்பூா் வாராந்திர ரயில் (எண்: 22816) கோவையில் இருந்து அக்டோபா் 9, 16, 23, 30 மற்றும் நவம்பா் 6, 13, 20 ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com