குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படை

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 4

கோவை: கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில், கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் 52 போ் உயிரிழந்தனா். 200க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய 168 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய கோவையைச் சோ்ந்த ராஜா, முஜிபூா் ரகுமான் ஆகியோா் கைது செய்யப்படவில்லை. இதேபோல், திருச்சி, மதுரை குண்டு வெடிப்பு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய அபுபக்கா் சித்திக், அயூப் என்கிற அஷ்ரப் அலி ஆகியோரும் கைது செய்யப்படவில்லை.

தலைமறைவாக உள்ள இந்த 4 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் பற்றிய தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் சிபிசிஐடி போலீஸாா் அறிவித்துள்ளனா்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள குற்றறவாளிகளைப் பிடிக்க சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பாபு தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனிப்படை போலீஸாா் கோவை, திருச்சி, மதுரை, சென்னை பகுதிகளில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா். 4 பேரின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை தெலங்கானா, ஆந்திரா, கா்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநில போலீஸாருக்கு அனுப்பிவைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com