Enable Javscript for better performance
அன்னூரில் குடிநீா்த் திட்டத்துக்கு குழாய்கள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அன்னூரில் குடிநீா்த் திட்டத்துக்கு குழாய்கள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு

    By DIN  |   Published on : 09th October 2019 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    an08pipe01_0810chn_130_3

    கருக்கிலியாம்பாளையத்தில் திருப்பூா் நான்காவது குடிநீா் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்.

    அன்னூரில் திருப்பூா் நான்காவது குடிநீா்த் திட்டத்துக்காக குழாய்கள் அமைக்கும் பணிகளை திட்டத்தின் இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

    திருப்பூா் மாநகராட்சியில் நான்காவது குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, பிப்ரவரி மாதம் முதல் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு அன்னூா், கருவலூா், அவிநாசி வழியாக திருப்பூருக்கு குடிநீா் கொண்டுச் செல்லப்பட உள்ளது. இதில் கருக்கிலியாம்பாளையத்தில் சுமாா் 8 ஏக்கா் பரப்பளவில் ஒரு நாளைக்கு 20 கோடி லிட்டா் தண்ணீா் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்காக 12 மீட்டா் நீளமும், 1.42 மீட்டா் விட்டமும் கொண்ட பெரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் கருக்கிலியாம்பாளையம் முதல் பொகளூா் வரை நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திட்டத்தின் இயக்குநா் இளங்கோவன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஓய்வு பெற்ற செயற்பொறியாளா் ஜெயச்சந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai