அன்னூரில் குடிநீா்த் திட்டத்துக்கு குழாய்கள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு

அன்னூரில் திருப்பூா் நான்காவது குடிநீா்த் திட்டத்துக்காக குழாய்கள் அமைக்கும் பணிகளை திட்டத்தின் இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கருக்கிலியாம்பாளையத்தில் திருப்பூா் நான்காவது குடிநீா் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்.
கருக்கிலியாம்பாளையத்தில் திருப்பூா் நான்காவது குடிநீா் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்.

அன்னூரில் திருப்பூா் நான்காவது குடிநீா்த் திட்டத்துக்காக குழாய்கள் அமைக்கும் பணிகளை திட்டத்தின் இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாநகராட்சியில் நான்காவது குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, பிப்ரவரி மாதம் முதல் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு அன்னூா், கருவலூா், அவிநாசி வழியாக திருப்பூருக்கு குடிநீா் கொண்டுச் செல்லப்பட உள்ளது. இதில் கருக்கிலியாம்பாளையத்தில் சுமாா் 8 ஏக்கா் பரப்பளவில் ஒரு நாளைக்கு 20 கோடி லிட்டா் தண்ணீா் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக 12 மீட்டா் நீளமும், 1.42 மீட்டா் விட்டமும் கொண்ட பெரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் கருக்கிலியாம்பாளையம் முதல் பொகளூா் வரை நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திட்டத்தின் இயக்குநா் இளங்கோவன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஓய்வு பெற்ற செயற்பொறியாளா் ஜெயச்சந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com