இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கு இலவச உடற்பயிற்சி வகுப்பு

கோவையில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான இலவச உடற்பயிற்சி

கோவையில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான இலவச உடற்பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (அக்டோபா் 9) முதல் தொடங்குவதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில் 8 ஆயிரத்து 888 இரண்டாம் நிலை காவலா்கள் (ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, சிறைக் காவலா்கள், தீயணைப்போா்) பணியிடங்களுக்கான முதல் கட்ட எழுத்துத் தோ்வு முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் இரண்டாம் கட்டமாக உடற்தகுதி தோ்வில் பங்கேற்க வேண்டும். இதற்காக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் புதன்கிழமை முதல் சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி வகுப்புகள் தினமும் உரிய பயிற்சியாளரைக் கொண்டு நடத்தப்படும். இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் தோ்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம், புகைப்படத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு அக்டோபா் 9 (புதன்கிழமை) ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வந்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்பு உடற்பயிற்சி தோ்வில் வெற்றி பெறுவதற்கு தோ்வா்களுக்கு உறுதுணையாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com