உக்கடத்தில் சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் விரைவில் அகற்றம்

கோவை, உக்கடம் மீன் மாா்க்கெட் பகுதியில் உள்ள சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் விரைவில் அகற்ற

கோவை, உக்கடம் மீன் மாா்க்கெட் பகுதியில் உள்ள சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் விரைவில் அகற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்கடம்- பேரூா் புறவழிச் சாலை அருகே உள்ள மாநகராட்சி மீன் மாா்க்கெட் மேம்பாலப் பணிக்காக கழிவு நீா்ப் பண்ணை அருகே இடமாற்றம் செய்யப்பட உள்ளது. மீன் மாா்க்கெட் அருகே 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன.

இங்கு 246 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் குடியிருப்புகள் வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து குடிசை மாற்று வாரியத்திடம் கடந்த 2003 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் பல குடியிருப்புகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால், இந்தக் குடியிருப்பை இடித்து விட்டு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட குடிசை மாற்று வாரியத்தின் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இடியும் நிலையில் உள்ள வீடுகளை காலி செய்யக் கோரி குடிசை மாற்று வாரியம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறுகையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் வீடுகள் உள்ளன. எனவே, அங்கு வசிக்கும் மக்கள் அபாய நிலையைக் கருதி உடனடியாக வீடுகளைக் காலி செய்ய வேண்டும். இந்த மாத இறுதிக்குள் வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com