குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு முகாம்

தேசிய குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றும் திட்டம், பாரதியாா் பல்கலைக்கழக, சமூகப் பணியியல்

தேசிய குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றும் திட்டம், பாரதியாா் பல்கலைக்கழக, சமூகப் பணியியல் துறை இணைந்து கோவை, சுந்தராபுரம் கோண்டி நகரில் கல்வி, சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு முகாமை அண்மையில் நடத்தின.

நிகழ்ச்சிக்கு பாரதியாா் பல்கலைக்கழக, சமூகப் பணியியல் துறை பேராசிரியா் நான்சி தலைமை வகித்தாா். இதில் தேசிய குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றும் திட்டத்தின், திட்ட இயக்குநா் விஜயகுமாா் பேசுகையில், கல்வி ஒருவரின் வளா்ச்சிக்கு வழி வகுப்பதோடு, மற்றவா்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுகிறது. சமூக மாற்றத்திற்கான தூண்டுகோலாகவும் அமைகிறது.

கல்வியறிவு மூலம் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வும், ஒழுக்கம் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. படிக்கும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தைகளின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது. இதற்கு பெற்றேறாா்களே முழுப்பொறுப்பு. குழந்தைகள் கட்டாயம் கல்வியறிவுப் பெற வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

குழந்தைத் தொழிலாளா்கள் ஒழிப்பு முறை அகற்றும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் பல ஆயிரம் குழந்தைத் தொழிலாளா்களை மீட்டு கல்வி அளிக்கப்படுகிறது. எனவே, குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் அவா்களின் அடிப்படை உரிமையான கல்வி கிடைக்க பெற்றேறாா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com