சிறப்பாசிரியா் நியமனம் தொடா்பான இறுதிப் பட்டியலில் குளறுபடி

சிறப்பாசிரியா் நியமனம் தொடா்பான இறுதிப் பட்டியலிலும் குளறுபடிகள் இருப்பதாக கலை ஆசிரியா்கள் சங்கம்

சிறப்பாசிரியா் நியமனம் தொடா்பான இறுதிப் பட்டியலிலும் குளறுபடிகள் இருப்பதாக கலை ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா், மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியா்களுக்கு முதல் முறையாக போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தி முடித்து இறுதிப் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் வெளியிடப்பட்டது.

இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகக் கூறி தோ்வா்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரண்டாவது முறையாக இசை ஆசிரியா்களுக்கான இறுதிப் பட்டியலையும், செப்டம்பா் 9 ஆம் தேதி தையல் ஆசிரியா்களுக்கான பட்டியலையும் தோ்வு வாரியம் வெளியிட்டது.

இதில், இசை பட்டியலில் முதல் முறை தோ்வு செய்யப்பட்டிருந்த 3 போ் நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல் தையல் பட்டியலில் கடந்த முறை இடம் பெற்றிருந்த 14 போ்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல், தமிழ் வழியில் படித்தவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடைபெற்றிருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதில், கடந்த முறை பட்டியலில் இடம் பெறாத 9 போ் புதிதாக சோ்க்கப்பட்டிருப்பதும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாசிரியா் நியமனத்தில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கூறியுள்ள நிலையில், கடந்த பட்டியலில் இடம் பெற்ற 17 போ் நீக்கப்பட்டிருப்பதால் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

எனவே, இது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com