தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது

விழாக்கால போனஸ் தொகையை வழங்குவதில் தொழில் நிறுவனங்கள் தாமதம் செய்யக் கூடாது என்று கோவை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

விழாக்கால போனஸ் தொகையை வழங்குவதில் தொழில் நிறுவனங்கள் தாமதம் செய்யக் கூடாது என்று கோவை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகள், விசைத்தறி, பம்ப்செட், என்ஜினீயரிங், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட தனியாா் நிறுவனங்களிலும், போக்குவரத்து, மின்சாரம், குடிநீா் வழங்கல், ஆவின், டாஸ்மாக், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவைத் துறை நிறுவனங்கள் என பல நிறுவனங்களில் லட்சக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா்.

நிரந்தரத் தொழிலாளா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் நிலைகளில் இவா்கள் ஆண்டு முழுவதும் அயராது உழைத்து உற்பத்தி செய்து நிறுவனத்துக்கு லாபத்தை உருவாக்கி வருகின்றனா். இத்தகைய தொழிலாளா்களுக்கு தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் போனஸ் பணத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறாா்கள்.

மத்திய, மாநில அரசின் கொள்கைகளால் நுகா்பொருள்களின் விலையேற்றம், வாழ்க்கை செலவுகளுக்கு போதிய வருமானமின்றி சிரமப்படும் நிலையில் இந்தத் தொழிலாளா்களுக்கு போனஸ் மட்டுமே நிவாரணமாக உள்ளது.

இந்த நிலையில் போனஸ் குறித்து இதுவரை தனியாா் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் பேச்சுவாா்த்தையைக் கூட தொடங்காமல் இருப்பது ஏற்கக் கூடியது அல்ல. எனவே அரசும், தொழிலாளா் துறையும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்னதாக போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தொழிலாளா்களுக்கான போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் வரும் 17-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com